திட்டம் பற்றி

 “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதி நவின்ற தமிழின் இனிமையை உணர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்த்துறை 2018 முதல் தகுதி வாய்ந்த உதவிப்பேராசிரியர்களைக் கொண்டு அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் முதன்மைத்தமிழைக் கற்பித்து வருகிறது.

 அறிஞர்களின் சிறப்புச் செற்பொழிவுகள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் கணினி வழி பயிற்சிகள், பயிலரங்கங்கள ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மாணவர்களுக்கு நூல் விமர்சனங்கள், தமிழ் மன்றத்தின் சார்பில் திறன்வளர் போட்டிகள்,இலக்கிய வரலாற்று நாடகங்கள், தேசிய பன்னாட்டுக் கருத்தரங்கங்கள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் தமிழ்த்துறையில் நடைபெற்று வருகின்றன.


தொலைநோக்கு (Vision)

சங்ககால இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரையிலான பாடப்பகுதிகள் மூலம் உலகளாவிய மனிதநேயம் வாழ்வியல் விழுமியங்கள், சமூகப் பங்களிப்பு, சமூக மேம்பாடு, இயற்கையைப் பேணிக்காக்கும் கல்வியை மாணவர்களுக்கு வழங்குதல்.


குறிக்கோள் (Mission)

மாணவர்களுக்குத் தமிழ் மொழியின் செம்மொழிச்சிறப்பினையும், பெருமையினையும் பாடத்திட்டத்தின் வழியே விளக்குதல்.

தமிழ்ச்சமூகத்தின் கலாச்சாரம்,பண்பாடுகளை மாணவர்களுக்குக் கற்பித்து மாணவர்களை நன்மாந்தராக்குதல்.தமிழ்மொழிப்பாடம் கற்கும் மாணவர்களுக்கு தாய் மொழியை பிழையின்றி பேசவும்,எழுதவும் பயிற்சி வழங்கள்.

மாணவர்களின் பன்முகத்திறமைகளை வெளிக்கொணரும் முயற்சிகளை மேற்கொள்ளுதல்,பல்வேறு வகையினைப் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் படுத்துதல்.


துறை செயல்பாடுகள் மேலும் பார்க்க